“அந்த வீடியோவில் இருப்பது நான் தான்” காரில் இறங்கும் கருப்பு உடை பெண் அமைச்சர் கீர்த்தனா அல்ல… பரவும் வதந்திக்கு மலேசிய பெண் வினோஷா உருக்கமான விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த வீடியோவில் இருப்பது நான் தான்” காரில் இறங்கும் கருப்பு உடை பெண் அமைச்சர் கீர்த்தனா அல்ல… பரவும் வதந்திக்கு மலேசிய பெண் வினோஷா உருக்கமான விளக்கம்..!!

Published

on

சமூக வலைதளங்களில் கருப்பு உடை அணிந்த பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதில் இருப்பது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என வதந்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், “வீடியோவில் இருப்பது நான் இல்லை; ஒருவேளை நானாகவே இருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், வீடியோவில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த வினோஷா என்பவர் கண்ணீருடன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவும் இந்த வதந்தி தனக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்து மலேசிய காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/DcbhcpDvRvk/?utm_source=ig_web_button_share_sheet

காரில் இருந்து இறங்கி வேலைக்குச் செல்லும் இயல்பான வீடியோவை எடுத்து, அமைச்சருடன் தொடர்புபடுத்தி ஆடை குறித்து தவறான விமர்சனங்களை எழுப்பியதாக அவர் வேதனை தெரிவித்தார். தன் குடும்பத்தினரும் உறவினர்களும் எனக்கு ஆதரவாக நிற்பதால் இந்த ட்ரோல்கள் தன்னை பாதிக்காது என்றும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் வினோஷா உறுதியாகக் கூறியுள்ளார்.

Advertisement

வேலைக்குச் செல்வதற்கு ஏற்றவாறே தான் நாகரிகமாக ஆடை அணிந்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தவறான தகவல்களைப் பரப்புவதையும், அமைச்சரையும் தன்னையும் தேவையற்ற முறையில் விமர்சிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in