CRIME
அடக்கடவுளே..! பெற்றோரை கொன்ற அதே விஷ ஊசி.. ஜாமீனில் வந்த நர்ஸ் அதே பாணியில் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட கொடூரம்… நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி..!!
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேகா என்ற நர்ஸ், சங்காரெட்டி மாவட்ட தலைமையகத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காகத் தனது பெற்றோரைக் கொன்ற வழக்கில் சிறை சென்ற இவர், அண்மையில் ஜாமீனில் வெளிவந்து இந்த விடுதியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் சுரேகாவின் பெற்றோர் தங்களது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சுரேகா ஒரு இளைஞரை தீவிரமாகக் காதலித்ததும், அதற்குப் பெற்றோர் சம்மதிக்காததால் நர்ஸ் தொழிலைப் பயன்படுத்தி பெற்றோருக்கு விஷ ஊசி போட்டுக் கொலை செய்ததும் அம்பலமானது. இதனையடுத்து ஜனவரி 24 அன்று போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் விடுதலையாகி தனியாகத் தங்கியிருந்த சுரேகா, தான் பெற்றோரைக் கொல்லப் பயன்படுத்திய அதே விஷ ஊசியைத் தமக்கும் செலுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சங்காரெட்டி போலீசார், சுரேகாவின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
