அடக்கடவுளே…! வீட்டில் பணத்தை வைத்தால் இதுதான் நிலைமையா..? ரூ.12 லட்சத்தை நார் நாராக கடித்துக் குதறிய எலிகள்..! கண்ணீரில் தவிக்கும் குடும்பம்..! உத்தரப் பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே…! வீட்டில் பணத்தை வைத்தால் இதுதான் நிலைமையா..? ரூ.12 லட்சத்தை நார் நாராக கடித்துக் குதறிய எலிகள்..! கண்ணீரில் தவிக்கும் குடும்பம்..! உத்தரப் பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தனது குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகவும், நகை எடுக்கவும் பல வருடங்களாக பணத்தைச் சேமித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு தங்க நகைகள் அணிவது மிகவும் பிடிக்கும். அதனால் அவர் தனது சேமிப்புப் பணம் முழுவதையும் வீட்டில் இருந்த ஒரு பழைய இரும்புப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

சமீபத்தில் நகை வாங்குவதற்காக அந்த பெண் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார். பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நார் நாராகக் கிழிக்கப்பட்டு, குப்பைக் கூளம் போலக் கிடந்துள்ளன. பெட்டியின் ஓட்டை வழியாக உள்ளே புகுந்த எலிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை முற்றிலும் கடித்து துண்டு துண்டாக்கியது தெரியவந்தது.

Advertisement

தங்கள் வாழ்நாள் சேமிப்பு மொத்தமும் எலிகளால் பாழானதைக் கண்டு அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுது புலம்பினர். கிழிக்கப்பட்ட நோட்டுகளை மாற்ற முடியுமா என்பது குறித்து அவர்கள் தற்போது வங்கி அதிகாரிகளை அணுகி ஆலோசனை கேட்டு வருகின்றனர்.முன்னதாக, அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்திற்குள் புகுந்த எலிகள், அங்கிருந்த ரூ.12 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் நோட்டுகளைக் கடித்து நாசமாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் தங்களின் பணத்தை வீடுகளில் வைப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான வங்கி கணக்குகளில் சேமிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in