“அரிசியை 2 முறைதான் கழுவ வேண்டும்” ஆசிய பாரம்பரியத்தில் கையை வைக்கும் தண்ணீர் ஒழுங்குமுறை வாரியம்..! 2.8 கோடி ரூபாய் செலவில் பிரிட்டன் அரசு தொடங்கிய பிரசாரத்தால் வெடித்த புதிய சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அரிசியை 2 முறைதான் கழுவ வேண்டும்” ஆசிய பாரம்பரியத்தில் கையை வைக்கும் தண்ணீர் ஒழுங்குமுறை வாரியம்..! 2.8 கோடி ரூபாய் செலவில் பிரிட்டன் அரசு தொடங்கிய பிரசாரத்தால் வெடித்த புதிய சர்ச்சை..!!

Published

on

இங்கிலாந்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையைக் கையாள்வதற்காக, அங்கு வாழும் தெற்காசிய மற்றும் பிற ஆசிய வம்சாவளி குடும்பங்கள் தங்களது சமையல் மற்றும் மத வழிபாட்டு முறைகளில் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என பிரிட்டன் அரசு ஒரு புதிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக, ‘அரிசியை ஐந்து முதல் ஏழு முறை கழுவுவதற்குப் பதிலாக இரண்டு முறை மட்டுமே கழுவுங்கள்’ என்ற பிரிட்டனின் இந்த அறிவுரை தற்போது அந்த நாட்டு மக்களிடையே பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் தண்ணீர் ஒழுங்குமுறை வாரியமான ‘Ofwat’ அமைப்பின் நிதி உதவியுடன், ‘சவுத் ஸ்டாஃப்ஸ் வாட்டர்’ மற்றும் ‘கேம்பிரிட்ஜ் வாட்டர்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய மதிப்பில் சுமார் 2.8 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

தெற்காசியப் குடும்பங்களில் சமைப்பதற்கு முன்பு அரிசியை தண்ணீர் குழாயில் ஐந்து முதல் ஏழு முறை, அதாவது தண்ணீர் தெளிவாகும் வரை கழுவுவது ஒரு வழக்கமான நடைமுறையாகும். இந்த பிரசாரத்தின் மூலம், அரிசியை இரண்டு முறை மட்டுமே கழுவ வேண்டும் என ஆசிய மக்களை பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பிரபல சமையல் கலைஞர் பிங் கூம்ப்ஸ் இதற்கான வீடியோக்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இப்படி செய்வதன் மூலம் ஒவ்வொரு முறையும் சமைக்கும் போது 5 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்றும், அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றலாம் என்பதையும் இந்த திட்டம் பரிந்துரைக்கிறது. மேலும், இஸ்லாமிய மக்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பு தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் ‘உது’ என்ற மத சடங்கின் போதும் ஒரு லிட்டர் ஜக்கைப் பயன்படுத்தி தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த விழிப்புணர்வு திட்டம் பிரிட்டனில் பெரும் அரசியல் மற்றும் சமூக எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. பிரிட்டனின் பழமையான குழாய் கட்டமைப்புகள் காரணமாக அங்குள்ள தண்ணீர் நிறுவனங்களால் தினமும் சுமார் 300 கோடி லிட்டர் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வீணாகிறது. இதை சரி செய்யாமல் மக்களின் கலாச்சார, மத நடைமுறைகளைக் குறை கூறுவது தவறு என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்களின் வரிப் பணத்தையும், வாட்டர் பில்களையும் இது போன்ற “விசித்திரமான திட்டங்களுக்கு” வீணாக்குவது நியாயமற்றது என கன்சர்வேடிவ் கட்சியின் மந்திரி மைக் வுட் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், அரிசியை பலமுறை கழுவுவது வெறும் ஸ்டார்ச்சை நீக்குவதற்கு மட்டுமல்ல, அது அரிசியின் தரத்தை மேம்படுத்தவும், அசுத்தங்களை நீக்கவும் அவசியம் என்று சமையல் மற்றும் சுகாதார நிபுணர்கள் பிரிட்டன் அரசின் இந்த நீர் சேமிப்பு ஆலோசனையை மறுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in