LATEST NEWS
“97 வயசுல கின்னஸ் ரெக்கார்டா..? பறக்கும் விமானத்தின் மீது நின்று சாதனை படைத்த பாட்டி..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!”
“வாழ்க்கையில் சலிப்பாக உட்கார்ந்திருப்பதை விட மேகங்களுக்கு நடுவே ஏதாவது சாகசம் செய்வது மேலானது” என்று பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான பெட்டி புரோமேஜ் தெரிவித்துள்ளார். கடுமையான பக்கவாத நோயிலிருந்து மீண்டு வந்த ஓராண்டிற்குள், பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்றபடி சாகசம் செய்து தனது சொந்த கின்னஸ் உலக சாதனையைத் தானே முறியடித்துப் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனின் செல்ட்டன்ஹாம் நகரைச் சேர்ந்த பெட்டி புரோமேஜ், சைரன்செஸ்டரில் உள்ள ‘ஆர்.எஃப்.சி ரெண்ட்கோம்ப்’ விமான நிலையத்தில் இந்தச் சாகசத்தை நிகழ்த்தினார். இந்தச் சாதனையைப் புரியும்போது அவரது துல்லியமான வயது 97 ஆண்டுகள் மற்றும் 127 நாட்கள் ஆகும். முன்னதாக 2022-ஆம் ஆண்டு தனது 93-வது வயதில் ‘உலகின் மிக முதிய பெண் விங் வாக்கர்’ என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருந்த இவர், தற்போது அந்த சாதனையைப் புதுப்பித்துள்ளார். தனது 87-வது வயதில் இருந்து இதுவரை மொத்தம் 6 முறை இவர் விமான இறக்கையில் நின்று சாகசம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/DbqfdydRfa-/?utm_source=ig_web_button_share_sheet
இந்த சாகசம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி, தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நோக்கிலும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் இவருக்குக் கடுமையான பக்கவாதம் ஏற்பட்டு பேச்சுத் திறன் பாதிக்கப்பட்ட நிலையில், இவருக்குச் சிறப்பான சிகிச்சையளித்த செல்ட்டன்ஹாம் ஜெனரல் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காகவே இந்தச் சாகசத்தைச் செய்தார். “என்னால் இப்போது கார் ஓட்ட முடியாது, பார்வையும் சற்று மங்கிவிட்டது; எனவே சலிப்பாக இருப்பதை விட என்னால் முடிந்ததைச் செய்து வாழ்கிறேன்” என்று அவர் புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.
