என்ன கொடுமை இது…! “ஆய்வு செய்ய வந்தாரா..? அத்துமீற வந்தாரா..?”அரசு பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் வரம்பு மீறிய எம்.எல்.ஏ..! வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன கொடுமை இது…! “ஆய்வு செய்ய வந்தாரா..? அத்துமீற வந்தாரா..?”அரசு பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் வரம்பு மீறிய எம்.எல்.ஏ..! வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்..!!

Published

on

தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இப்ராகிம்பட்டினம் தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மல்ரெட்டி ரங்கா ரெட்டி (வயது 70). தெலுங்கானாவில் உள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ‘மகாலட்சுமி இலவச பஸ் பயண திட்டம்’ ஒன்றை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தன்னுடைய தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரசின் இத்திட்டம் மக்களைச் சரியாகச் சென்றடைந்துள்ளதா என்பதையும், பயனாளிகள் எவ்விதம் பயனடைகிறார்கள் என்பதையும் ஆய்வு செய்ய அவர் அரசு பஸ் ஒன்றில் ஏறியுள்ளார்.

அந்த பஸ் இப்ராகிம்பட்டினம் பகுதியில் இருந்து புறப்பட்டு, யம்ஜால் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது பஸ்சில் நின்று கொண்டு பயணித்த கல்லூரி மாணவி ஒருவரிடம் எம்.எல்.ஏ உரையாடியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் மாணவிக்கு ரூ.45 ஆயிரம் வரை சேமிப்பாகக் கிடைத்துள்ளது என்று கூறியபடி, அம்மாணவியைத் தொட்டுப் பேசியுள்ளார். மாணவி அதனை விரும்பாமல் நகர்ந்து செல்ல முயன்றபோதிலும், அவர் தொடர்ந்து அம்மாணவியின் கையைப் பிடித்தபடி பேச முயன்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

https://www.instagram.com/reel/DeMFX0UhcK4/?utm_source=ig_web_button_share_sheet

இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவாகி வைரலாகி வரும் நிலையில், பலரும் இதற்குத் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியின் பொதுச் செயலாளர் பிரவீன் குமார் கூறுகையில், பஸ் கண்டக்டரிடம் இருந்து புகார் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு எதிராகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பெண்களை அவமதிப்பதில் காங்கிரசும் பா.ஜ.க.வும் போட்டி போட்டுச் செயல்படுகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in