CRIME
ஐயோ கொடுமையே..! கணவனே செய்த கொடூரம்.. சங்கிலியால் கட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை கும்பல்.. ‘தூய்மைப்படுத்துதல்’ என்ற பெயரில் பெண்ணுக்கு நடந்த அநியாயம்..!!
குஜராத் மாநிலம் சுரேந்திரநகரில் ‘சுத்திகரிப்பு’ சடங்கு என்ற பெயரில் திருமணமான பெண் ஒருவர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவரைப் பிரிந்து வேறு ஒரு நபருடன் வாழச் சென்ற அந்தப் பெண்ணை, அவரது குடும்பத்தினரும் கணவரும் கண்டறிந்து கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், அவரை ஒரு மரத்தில் சங்கிலி மற்றும் கயிறுகளால் கட்டிவைத்து, மரக்கட்டைகளால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலின் போது, ‘சுத்திகரிப்பு’ என்ற போர்வையில் அப்பெண் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மேலும், இந்த அநியாயத்தை எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து, அதைச் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்து பரப்பியுள்ளனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோக் காட்சிகளைக் கண்டு காவல்துறையினர் உடனடியாகத் தாமாக முன்வந்து தீவிர விசாரணையில் இறங்கினர். ஏஎஸ்பி வேதிகா பியானி மற்றும் காவல்துறையினரின் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 9 பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
