LATEST NEWS
அய்யோ நெஞ்சே நடுங்குது.. 2 பைக்குகள் நேருக்கு நேர் பயங்கர மோதல்.. காற்றில் பறந்த வாலிபர்கள்.. வைரலாகும் திகிலூட்டும் நொடிகள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் சாய்யான் காவல் எல்லைக்குட்பட்ட தெஹ்ரா பகுதியில் உள்ள ரிஷி கார்டன் முன்பாக, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மிகக் கொடூரமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விபத்தின் வேகம் எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்றால், மோதிய அந்த அதிர்ச்சியில் இரண்டு பைக் ஓட்டுநர்களும் காற்றில் பல அடி உயரத்திற்குத் தூக்கியெறியப்பட்டுச் சாலையில் விழுந்தனர். இந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்தின் ஒட்டுமொத்தக் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.
விபத்து நடந்த உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் பெருமளவில் கூடினர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கர விபத்தில் இரு இளைஞர்களும் உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்துச் சாய்யான் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
