“கொடுத்த வாக்கை காப்பாத்திட்டார் விஜய்” 1,100 நாள் போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி.. பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்தானதால் கண்ணீர் மல்க நன்றி சொன்ன மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கொடுத்த வாக்கை காப்பாத்திட்டார் விஜய்” 1,100 நாள் போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி.. பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்தானதால் கண்ணீர் மல்க நன்றி சொன்ன மக்கள்..!!

Published

on

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்துப் பேசிய பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன், “முதலமைச்சர் விஜய் அவர்கள் எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, எங்கள் கண்ணீரையும் துடைத்துள்ளார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, தங்களது விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் 1,100 நாட்களைத் தாண்டித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது புதிய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தும் தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு சாலைக்கு “தளபதி விஜய் சாலை” எனப் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

மறுபுறம், இத்திட்டம் கைவிடப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று அவர் விமர்சித்துள்ளார். இதனால் இத்திட்டத்தை மையமாக வைத்துத் தற்போதைய ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in