யாரும்மா நீ..? “எனக்கு புருஷனும் வேணும், காதலனும் வேணும்” நாங்க 3 பேரும் ஒரே வீட்டுலதான் வாழ்வோம்.. போலீசாரையே அலறவிட்ட இளம்பெண்… கணவர் கொடுத்த புகாரால் அதிர்ச்சி…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரும்மா நீ..? “எனக்கு புருஷனும் வேணும், காதலனும் வேணும்” நாங்க 3 பேரும் ஒரே வீட்டுலதான் வாழ்வோம்.. போலீசாரையே அலறவிட்ட இளம்பெண்… கணவர் கொடுத்த புகாரால் அதிர்ச்சி…!!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற இளம்பெண், தனது கணவர் சுபம் வர்மா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்ற இளைஞருடன் அஞ்சுவுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரங்களில் நிதின் அடிக்கடி அஞ்சுவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இந்த விவகாரம் கணவர் சுபமிற்குத் தெரியவரவே, அவர் அஞ்சுவைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால், அஞ்சு காதலைக் கைவிடாமல், கணவரின் எதிர்ப்பையும் மீறி காதலனை வீட்டிற்கு அழைத்து வந்ததால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உறவினர்களின் எதிர்ப்புக்குப் பின், கணவர் சுபம் இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் கணவன், மனைவி மற்றும் காதலன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கணவர் சுபம், “என் மனைவி என்னுடன் வாழ வேண்டும் அல்லது காதலனுடன் செல்ல வேண்டும், இருவருடனும் ஒரே வீட்டில் இருக்க முடியாது, இல்லையென்றால் நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்” எனக் கூறினார். ஆனால் அஞ்சு, “எனக்கு கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும்; ஒரே வீட்டில் இருவருடனும் சேர்ந்துதான் வாழ்வேன்” என பிடிவாதமாக அடம் பிடித்ததால் அதிர்ச்சியடைந்த போலீசார், எந்த முடிவும் எட்டப்படாமல் மூவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in