தலைமைச் செயலாளர் மாற்றம்..? அமைச்சர் ஷாஜகான் கொடுத்த அதிரடி அப்டேட்..! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தலைமைச் செயலாளர் மாற்றம்..? அமைச்சர் ஷாஜகான் கொடுத்த அதிரடி அப்டேட்..! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன..?!

Published

on

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், தலைமைச் செயலாளர் மாற்றம், வக்பு சொத்துகள் மீட்பு மற்றும் சிறுபான்மையினருக்கான புதிய திட்டங்கள் குறித்து விரிவாகத் தெரிவித்தார். தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்குச் சொந்தமான சில சொத்துகள் வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், அந்த சொத்துகளை மீட்டு மீண்டும் சம்பந்தப்பட்ட வக்பு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், அவற்றை சட்டரீதியாக மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, மீட்கப்படும் சொத்துகள் உரிய வக்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

வருகிற 27-ந்தேதி சட்டசபையில் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, சிறுபான்மையினரின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் சமுதாய முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. குறிப்பாகக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதுடன், தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Advertisement

த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள் செயல்பாடு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு இடமில்லாத வகையில் ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருவதாகக் கூறினார். மேலும், தேர்தல் காலத்தில் தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டதாகவும், தற்போது அவருக்கு மேலும் 6 மாத காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அரசின் நிர்வாகப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றார். அதேநேரத்தில், தலைமைச் செயலாளர் பா.ஜனதா சார்பில் நியமிக்கப்பட்டவர் என்ற கருத்தை முன்வைத்து சில அரசியல் கட்சிகள் பல்வேறு தகவல்களைத் தெரிவித்து வரும் சூழலில், தலைமைச் செயலாளர் மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் முழுமையாக ஆய்வு செய்து, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பின்னர் உரிய முடிவை எடுப்பார் என்றும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in