LATEST NEWS
“இந்த சனியன் இதோடு ஒழியட்டும்” இப்படிப்பட்ட பொண்டாட்டி எனக்கு வேண்டாம்… மனைவி போட்டோவில் காரித்துப்பி கங்கையில் இறுதிச்சடங்கு செய்த கணவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரித்வாரில் ஒரு நபர், தனது மனைவி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்கள் செய்வதால் ஏற்பட்ட அதிருப்தியில், அவர் உயிரோடு இருக்கும்போதே அவருக்குப் பிண்ட தானம் மற்றும் இறுதிச் சடங்குகளைச் செய்த விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஹரித்வாரின் ஹர் கி பௌரி பகுதியில் உள்ள கங்கை நதியில் நின்றுகொண்டு, தனது மனைவியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அவர் இந்தச் சடங்குகளைச் செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தங்களின் குடும்ப அமைதியைக் கெடுப்பதாகவும், பலமுறை தடுத்தும் மனைவி கேட்காததால் அவர் தனக்கு “இறந்துவிட்டார்” எனக் கூறி இந்த அடையாளச் சடங்கை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இணையவாசிகள் மத்தியில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன. சில நெட்டிசன்கள் சமூக ஊடக மோகத்தால் குடும்ப உறவுகள் சீரழிவதைச் சுட்டிக்காட்டி கணவனின் விரக்தியை ஆதரித்துப் பேசி வரும் நிலையில், பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இச்செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு குடும்பப் பிரச்சினையைத் திறந்தவெளிப் பொது இடத்தில் சடங்குகள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு முன்பாக அவமதிப்பாக மாற்றுவது மற்றும் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவது முற்றிலும் தவறான, அநாகரிகமான நடவடிக்கை என்றும், தம்பதியினருக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, இத்தகைய தீவிரமான மற்றும் உணர்வுப்பூர்வமான சடங்குகளைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
