LATEST NEWS
“ஏத்துக்கவே முடியாது.. சிறுபிள்ளைத்தனமான செயல்” எரியும் தீயில் எண்ணெயை ஊற்றிய முன்னாள் ஐஏஎஸ் சகாயத்தின் பேச்சு.. கொந்தளிப்பில் தவெக, ஆதரவில் திமுக..!!
தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சியையும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது, மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாகவும், அவருடைய தாடைப் பகுதியைச் சுட்டிக்காட்டும் வகையிலும் விஜய் ஒரு சைகையைச் செய்தது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்டாலினின் சிறை அனுபவத்தையும், அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்காயத்தையும் கிண்டல் செய்யும் வகையில் அமைந்த இந்தச் செயலுக்கு திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்த சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், அவசரநிலைக் காலத்தில் தான் சந்தித்த தாக்குதல்கள் பற்றியும், சிறையில் தாடை உடைந்ததால் இன்று வரை தான் அனுபவித்து வரும் உடல் ரீதியான பாதிப்புகள் பற்றியும் உருக்கமாக விவரித்திருந்தார். அதேசமயம், ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என தவெக தரப்பில் நிர்மல் குமார் பேசியது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் விவாதத்தை மேலும் தீவிரமடையச் செய்தது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், விஜய்யின் இந்தச் செயலைத் தன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். திமுக மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், முன்னாள் முதலமைச்சரின் நிரந்தர உடல் பலவீனத்தைக் கேலி செய்யும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது என்றும், மாண்புமிகு தமிழக சட்டசபையில் சிறுபிள்ளைத்தனமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். சகாயத்தின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தவெக ஆதரவாளர்கள் இணையத்தில் அவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
