LATEST NEWS
கேரவனுக்குள் 2 லட்சம்… திமுகவின் குரலாக மாறிய விஜய்சேதுபதி… விஜய் எதிராக ஆள் சேர்க்கும் திமுக…!!
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், GenZ இளைஞர்களின் வாக்கு வங்கியை தக்கவைக்க திமுக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி தலைவரைப் பற்றிப் பேசிய கருத்துகள் அரசியல் தளத்தில் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
பிக்பாஸ் வீட்டின் முதல் வாரத் தலைவராக இருந்த ஷாதிகாவுக்கு அறிவுரை வழங்கும் வகையில் பேசிய விஜய் சேதுபதி, “பொறுப்பும் பிரச்சனையும் வரும்போது தெறித்து ஓடுவது தலைவருக்கு அழகல்ல. வாக்குறுதிகளை நிறைவேற்றிப் பொறுப்பை ஏற்பதே உண்மை தலைமை; அதைவிட்டுவிட்டு எதிரணி மீது பழியைப் போட்டு ஓடுவது தலைமை பண்பு கிடையாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவர் எந்தக் கட்சிப் பெயரையோ நபரையோ நேரடியாகக் குறிப்பிடாதபோதிலும், இந்தக் கருத்துகள் தமிழக முதல்வர் விஜய்யையும், அவருடைய அரசியல் அணுகுமுறையையும் மறைமுகமாகத் தாக்கிப் பேசுவது போலவே இருப்பதாக இணையத்தில் நெட்டிசன்களும் அரசியல் விமர்சகர்களும் வாதிடத் தொடங்கினர்.
விஜயின் ஆதரவாளர்கள் அவரை சும்மா விடுவார்களா.? விஜய் சேதுபதியை வெச்சு செய்ய தொடங்கி இருக்கிறார்கள், அந்த வகையில் கடந்த வருடம் ரம்யா மோகன் என்கிற பிரபலம் நடிகர் விஜய் சேதுபதி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார், அதில் கோலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது ஜோக் இல்லை.
தற்போது மீடியாவில் பிரபலமாக இருக்கும் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தான் எதிர்பார்க்காத உலகத்திற்குள் இழுக்கப்பட்டார். தற்போது அவர் ரீஹேப் சென்டரில் இருக்கிறார். கேரவன் ஃபேவர்களுக்காக ரூ. 2 லட்சம் மற்றும் டிரைவ்ஸுக்காக ரூ. 50 ஆயிரம் கொடுத்திருக்கும் விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் புனிதர் மாதிரி நடிக்கிறார். அந்த பெண்ணை பல ஆண்டுகளாக யூஸ் செய்துவிட்டார் விஜய் சேதுபதி.
இது ஒரு கதை மட்டும் அல்ல பல இருக்கிறது. இது போன்ற ஆட்களை மீடியா கொண்டாடுகிறது. டிரக்-செக்ஸ் நெக்சஸ் என்பது ஜோக் இல்லை உண்மை என பதிவு செய்து இருந்தார் ரம்யா மோகன். பின்னர் ட்வீட்டை நீக்கியதுடன் எக்ஸ் தள கணக்கையும் நீக்கிவிட்டார் ரம்யா மோகன். இருந்தாலும் விஜய் சேதுபதியை பற்றி இப்படியொரு புகார் வந்திருக்கிறதே என பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது முதல்வர் விஜய்யை விஜய் சேதுபதி சீண்டும் வகையில் பேசி இருந்த நிலையில் தற்பொழுது விஜய் சேதுபதி குறித்து ரம்யா மோகன் ட்விட்டர் பதிவு செய்துருந்த பதிவை எடுத்து வந்து, விஜய் சேதுபதியை வெச்சு செய்து கொண்டிருக்கிறார்கள், விஜய்யின் ஆதரவாளர்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி தேவையின்றி வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கி கொண்டிருக்கிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
