BREAKING: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு பதிவு.. சற்றுமுன் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு பதிவு.. சற்றுமுன் பரபரப்பு..!!

Published

on

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது, அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தர உயர்வு அனுமதி வழங்க லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில், இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே பி.டி. அரசகுமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுமார் 177 தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் வசூலித்து நம்பிக்கை மோசடி நடந்துள்ளதாகவும், அரசகுமாரின் 20 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊழல் வழக்கு தொடர்பாக, திருச்சியில் உள்ள அன்பில் மகேஷின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ரெய்டு நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in