LATEST NEWS
“3 நாளில் இறந்துடுவான்.. ரூமுக்குள் பூட்டி வைங்க..!” நாய் கடித்த பின் நாய் போலவே குரைத்த பள்ளி மாணவன்.. 22 நாட்களில் நடந்த நடந்த ட்விஸ்ட்.. மருத்துவர்களே வாயடைத்துப்போன சம்பவம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியில் நாய் கடித்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன், சில மாதங்களுக்குப் பின் நாய் போன்று குரைக்கத் தொடங்கி, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில், 22 நாட்களுக்குப் பின் அற்புதம் நிகழ்ந்தவாறு உயிர் பிழைத்துள்ள விசித்திரச் சம்பவம் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கரண் என்ற அந்த சிறுவன் வாரணாசியில் உள்ள அவனது மாமா வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த வளர்ப்பு நாய் அவனைக் கடித்துள்ளது. உடனடியாக அவனுக்கு டெட்டனஸ் ஊசி போடப்பட்டாலும், மருத்துவப் பணியாளர் ஒருவர் தவறான அறிவுரை வழங்கியதால் அவனுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. நான்கு மாதங்கள் வரை எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையில், திடீரென ஒருநாள் மயங்கி விழுந்த அந்தச் சிறுவன் நாய் போன்று குரைக்கவும், வாயிலிருந்து எச்சில் வடிய மற்றவர்களைக் கடிக்க முயலவும் ஆரம்பித்துள்ளான்.
சிறுவனின் இந்த மோசமான நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவனைப் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. வாரணாசியில் உள்ள ஒரு மூத்த மருத்துவர் கரணின் நிலையைப் பரிசோதித்துவிட்டு, இது ரேபிஸ் நோயின் இறுதி கட்டம் என்று கணித்தார். மேலும், அவன் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் இறந்துவிடுவது நிச்சயம் என்றும், அவனிடமிருந்து அனைவரும் விலகியிருக்குமாறும் கூறி, அவனை ஒரு இருட்டு அறையில் தனியாகப் பூட்டி வைக்குமாறு குடும்பத்தினரிடம் தெரிவித்துக் கைகளைக் கழுவிவிட்டார். எனினும், அவனது குடும்பத்தினர் நம்பிக்கையை முழுமையாகக் கைவிடாமல் தங்களது வீட்டிற்கே அவனைக் கொண்டு வந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, முதன்மை சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த தங்களது உறவினரான சுமன் என்பவரின் உதவியுடன் கரணுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் அடுத்தடுத்துச் செலுத்தப்பட்டன. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மொத்தம் 5 தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், வெறும் 22 நாட்களுக்குள் கரண் ஆச்சரியத்தக்க வகையில் படிப்படியாகக் குணமடைந்து தற்போது சக மாணவர்களுடன் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளான். இதுகுறித்து மாவட்ட மருத்துவமனை மருத்துவர் தேவேந்திர பிரதாப் பட்டேல் விளக்கம் அளிக்கையில், கடித்த நாய் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட வளர்ப்பு நாயாக இருந்திருக்கலாம் என்றும், சிறுவனுக்குக் கையில் கடிபட்டதால் ரேபிஸ் பரவ நீண்ட நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் கூறினார். மேலும், நாய் கடி பற்றிய அதீத பயத்தால் சிறுவனுக்கு ஏற்பட்ட மனநல பாதிப்பால் அவன் குரைத்திருக்கலாம் என்றும், இந்த வழக்கு மிகவும் தனித்துவமானது என்பதால் விரிவான மருத்துவ ஆய்வு தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
