மக்களே..! “செப். 17 மாலை 6 மாலை மணிக்கு இதை செய்ய மறக்காதீங்க” பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாட பாஜகவின் அதிரடி வேண்டுகோள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களே..! “செப். 17 மாலை 6 மாலை மணிக்கு இதை செய்ய மறக்காதீங்க” பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாட பாஜகவின் அதிரடி வேண்டுகோள்..!!

Published

on

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் நபின் தனது ‘X’ சமூக ஊடகப் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய சேவை என்பதே பிரதமர் மோடியின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது என்றும், அவரின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கை பயணம் என்பது ஈடு இணையற்றது என்றும் அவர் தனது பதிவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் நீண்ட ஆயுளுக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மக்கள் சேவையைப் பாராட்டும் வகையிலும், அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையிலும் இந்தத் தீபம் ஏற்றும் நிகழ்வில் பொதுமக்கள் பெருமளவில் பங்கெடுக்க வேண்டும் என நிதின் நபின் தனது வேண்டுகோளில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in