அய்யோ கொடுமையே… விளையாடப் போன இடத்துல இப்படி ஒரு கொடூரமா… கிணற்றில் மிதந்த உடலை பார்த்து அலறிய கிராமம்..! நெஞ்சை உலுக்கும் பெருஞ்சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே… விளையாடப் போன இடத்துல இப்படி ஒரு கொடூரமா… கிணற்றில் மிதந்த உடலை பார்த்து அலறிய கிராமம்..! நெஞ்சை உலுக்கும் பெருஞ்சோகம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டம் சந்தேரி காவல் எல்லைக்குட்பட்ட விக்ரம்பூர் கிராமத்தில் திங்கள்கிழமை ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. கூலித் தொழிலாளியான பல்வீர் குஷ்வாஹா என்பவரின் நான்கு சிறு மகன்களான 9 வயது தேவ், 7 வயது திரிதேவ், 6 வயது மகாதேவ் மற்றும் 4 வயது பிரியான்ஷ் ஆகிய நான்கு பேரும் விளையாடச் சென்றபோது, நிலத்தில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்தனர். இவர்களது தாய் குடும்பப் பிரச்சினை காரணமாகச் சில நாட்களுக்கு முன்பு தாய்வீட்டிற்குச் சென்றுவிட்ட நிலையில், இந்த நான்கு சிறுவர்களும் தங்களது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

திங்கள்கிழமை காலையில் வீட்டை விட்டு விளையாடச் சென்ற சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பாட்டி கிராமம் முழுவதும் தேடிப் பார்த்தும் குழந்தைகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், கிராமத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் இருந்த கிணற்றில் விளையாடச் சென்ற குழந்தைகள் தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மாலை வேளையில், கிணற்றின் நீரில் ஒரு சிறுவனின் உடல் மிதப்பதைக் கண்ட கிராமவாசி ஒருவர் இதுகுறித்துத் தகவல் தெரிவித்தார்.

Advertisement

தகவலறிந்து வந்த போலீசாரும், மீட்புக்குழுவினரும் கிராமவாசிகளின் உதவியோடு கிணற்றில் தேடுதல் வேட்டை நடத்தி, நான்கு சிறுவர்களின் உடல்களையும் மீட்டு சந்தேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உயிரிழந்த இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு விதிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என வட்டாட்சியர் திலீப் தரோகா தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in