“கஷ்டப்பட்டு காதல் கணவனை IPS ஆக்கிய மனைவி” அதிகாரி ஆனதும் கதவை பூட்டிய கணவன்… வீட்டின் முன் நீதிக்காகப் போராடும் பூஜா… இணையத்தை உலுக்கும் விவாதம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கஷ்டப்பட்டு காதல் கணவனை IPS ஆக்கிய மனைவி” அதிகாரி ஆனதும் கதவை பூட்டிய கணவன்… வீட்டின் முன் நீதிக்காகப் போராடும் பூஜா… இணையத்தை உலுக்கும் விவாதம்..!!!

Published

on

“கடின உழைப்பால் ஒரு மனிதன் இறுதியில் வெற்றியை அடைந்த பிறகு, அவனது குணம் ஏன் இப்படி மாறுகிறது?” என்ற வேதனையான கேள்வியோடு பீகாரில் அரங்கேறியுள்ள ஒரு நிஜ வாழ்க்கைத் துயரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா என்ற இளம்பெண், தனது குடும்பத்தினர் மற்றும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி, தான் காதலித்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் சாதாரணப் பின்னணியைக் கொண்ட தம்பதியராகவே இவர்களது வாழ்க்கை தொடங்கியுள்ளது.

பூஜா ஒரு பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். தான் வேலை பார்த்துக்கொண்டே, தனது கணவனின் லட்சியக் கனவான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு அவரைத் தயார் செய்தார். குடும்பச் செலவுகளைத் தானே சுமந்து, கணவர் தடையின்றிப் படிப்பதற்கான அனைத்துச் சூழ்நிலைகளையும் பூஜா ஏற்படுத்திக் கொடுத்தார். பூஜாவின் தியாகத்திற்கும் கணவனின் உழைப்பிற்கும் பலனாக, அவர் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகவும் மாறினார். இந்த வெற்றியால் தங்களது வாழ்க்கை மாறும் என பூஜா மகிழ்ச்சியடைந்தார்.

Advertisement

ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கணவர் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, அவரது குடும்பத்தினரின் தூண்டுதலால் பூஜாவுடன் பேசுவதைத் தவிர்த்து, அவரிடமிருந்து விலகிச் செல்லத் தொடங்கினார். தங்களுக்குள் இருந்த காதலையும், பூஜா செய்த தியாகங்களையும் மறந்துவிட்டு அவரைத் தவிக்கவிட்டுள்ளார். இன்று, தனது கணவனை உருவாக்குவதற்குக் காரணமாய் இருந்த அதே பூஜா, அந்த ஐபிஎஸ் அதிகாரியின் வீட்டின் முன்னால் நீதிக்காகத் கதவைத் தட்டி அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், உள்ளே இருக்கும் கணவனோ அவனது குடும்பத்தினரோ பூஜாவிற்காக ஒருமுறை கூட அந்த வீட்டின் கதவைத் திறக்கக்கூட முன்வரவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in