LATEST NEWS
“என் நாய் இருக்கிறது யாரும் வரக்கூடாது..!”ஆசிரியரைத் தடியால் விளாசிய பெண்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள வின்ட்சர் பாரடைஸ் சொசைட்டி குடியிருப்பில், லிஃப்ட்டிற்குள் நாய் வளர்க்கும் பெண் ஒருவர் அங்கிருந்த பெண் ஆசிரியரைத் தடியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது செல்லப் பிராணியான நாயை லிஃப்ட்டில் அழைத்துச் சென்றபோது, மற்ற யாரும் உள்ளே வரக்கூடாது என்று பிடிவாதம் பிடித்துள்ளார். அதே குடியிருப்பில் வசிக்கும் பெண் ஆசிரியர் ஒருவர், அந்தப் பெண் தடுத்ததையும் மீறி லிஃப்ட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அந்த நாய் வளர்க்கும் பெண், தன் கையில் வைத்திருந்த தடியை எடுத்து பெண் ஆசிரியரை லிஃப்ட்டிற்குள்ளேயே வைத்துத் தாக்கத் தொடங்கினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு வந்த குடியிருப்புப் பாதுகாப்புப் காவலர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் லிஃப்ட்டை விட்டு வெளியே வந்ததும் இரண்டு பெண்களும் மீண்டும் ஒருவரையொருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். வளர்ப்பு நாய்க்காக அண்டை வீட்டுப் பெண்ணை நடுரோட்டில் தடியால் அடித்த இந்த மோதல் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் மற்ற குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் அராஜகத்தில் ஈடுபடுவது குறித்துப் பொதுமக்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
