LATEST NEWS
“காட்டிற்குள் பயங்கரம்.. ழங்குடியினப் பெண்ணை சுருட்டிய மாபெரும் மலை பாம்பு..” அடுத்து நடந்த மிரளவைக்கும் காட்சி.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!
ஆப்பிரிக்கக் காடுகளில் பழங்குடியினப் பெண்கள் வேட்டைக்குச் சென்றபோது, ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஒரு பெண்ணை திடீரெனத் தாக்கி, அவரது உடல் முழுவதையும் சுருட்டி வளைத்து விழுங்க முயன்ற நடுக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வேட்டையாடுவதில் வல்லவர்களான அந்தப் பெண்கள் காட்டின் அடர்ந்த பகுதியில் விலங்குகளைத் தேடிச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த மாபெரும் மலைப்பாம்பு கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்ணைச் சுருட்டிப் பிடித்துக் கொண்டது. அந்தப் பாம்பு பெண்ணின் உடலை மிக இறுக்கமாகக் சுற்றியதால், அவரால் தப்பிக்க முடியாமல் உயிருக்குப் போராடியுள்ளார்.
அப்போது அவருடன் வந்த மற்ற பழங்குடியினப் பெண்கள் சற்றும் பயப்படாமல், உடனடியாக ஓடிவந்து அந்த ராட்சத மலைப்பாம்பை தங்களது கைகளால் பிடித்துப் பலவந்தமாக இழுத்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றினர். உயிரைப் பணயம் வைத்து அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாம்பின் பிடியிலிருந்து அந்தப் பெண்ணை மீட்டதால், அவர் எவ்வித ஆபத்துமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பழங்குடியினப் பெண்களின் இந்த அதிரடித் துணிச்சலும், இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்கள் காட்டிய ஒற்றுமையும் சமூக வலைதளங்களில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
