“அமைச்சரை காணவில்லை… கண்டுபிடிச்சா கமெண்ட்ல சொல்லுங்க…” சோஷியல் மீடியாவை அதிரவைக்கும் பாஜகவின் போஸ்டர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அமைச்சரை காணவில்லை… கண்டுபிடிச்சா கமெண்ட்ல சொல்லுங்க…” சோஷியல் மீடியாவை அதிரவைக்கும் பாஜகவின் போஸ்டர்..!!

Published

on

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு பெரும் குழப்பமும் அசௌகரியமும் நிலவி வருகிறது.

இந்தச் சூழலைக் சுட்டிக்காட்டி, போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனை காணவில்லை எனக் குறிப்பிட்டு தமிழக பாஜக சார்பில் சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கிளாம்பாக்கத்தில் இருந்து ஊர்களுக்குச் செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் குறித்த தகவல்கள் கிடைத்தால் COMMENT SECTION-ல் தெரிவிக்கவும்” எனக் குறிப்பிட்டு பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in