“அடச்சீ..! மிட்டாய் தர்றேன்னு சொல்லி…” கோவில்ல வச்சு சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்..! கதறி அழுதும் விடாமல் தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடச்சீ..! மிட்டாய் தர்றேன்னு சொல்லி…” கோவில்ல வச்சு சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்..! கதறி அழுதும் விடாமல் தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்..!!

Published

on

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சாவரி மாதா கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற 9 மற்றும் 10 வயதுடைய இரு சிறுமிகளிடம், 60 வயதான முதியவர் ஒருவர் அத்துமீறி நடந்துள்ளார். பிரசாதமாக மிட்டாய் கொடுத்து அருகிலேயே அமரவைத்த நந்தகிஷோர் சோனி என்ற அந்த முதியவர், சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஒரு சிறுமியின் ஆடையின் ஜிப்பை கழற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமிகள் இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு ஓடிச் சென்று குடும்பத்தினரிடம் விவரத்தைக் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும், சிறுமிகளின் குடும்பத்தினரும் அப்பகுதி கிராம மக்களும் குற்றவாளி ஒளிந்திருந்த காடியா மொஹல்லா பகுதிக்குச் சென்று அவரைப் பிடித்துள்ளனர். சிறுமிகள் அந்த முதியவரை அடையாளம் காட்டியதும் கோபமடைந்த கிராமத்துப் பெண்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு செருப்பு மற்றும் தடிகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அடிகளுக்குப் பயந்த அந்த முதியவர் கைகூப்பி அழுது மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

இச்சம்பவம் குறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குற்றவாளி நந்தகிஷோர் சோனியைப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா, போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி, சான்றுகளைச் சேகரித்து மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in