LATEST NEWS
“கோப்பை திருடன்…” துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அதிகாரிக்கு நேர்ந்த உச்சக்கட்ட அவமானம்… காரை எடுத்துக்கொண்டு ஓடிய மோஷின் நக்வி.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில், இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த பிறகு மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால், ரன்னர்-அப் பெற்ற இலங்கை அணிக்கு மட்டும் பதக்கங்களை வழங்கிவிட்டு, இந்திய அணியின் கோப்பை கொண்டாட்டத் தருணத்தை பாழாக்கியபடி மேடையில் அவர் நின்றிருந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மோஷின் நக்வியைக் கண்டதும், “ட்ரோபி சோர், ட்ரோபி சோர்” (Trophy Chor – கோப்பை திருடன்) என்று மிக உரத்த குரலில் கோஷங்களை எழுப்பினர். ஒட்டுமொத்த மைதானமும் தனக்கு எதிராகத் திரும்பியதால், நக்வி அங்கு கடும் அவமதிப்பையும் அசிங்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ரசிகர்களின் இந்தத் தொடர் முழக்கங்களால் நிலைதடுமாறிய அவர், துபாய் சர்வதேச மைதானத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், ரசிகர்களின் அவமானகரமான கோஷங்களுக்குப் பிறகு மோஷின் நக்வி தனது காரை நோக்கி வேகமாக ஓடுவதும், உடனடியாக காரின் முன் இருக்கையில் அமர்ந்து மைதானத்தை விட்டு அசிங்கப்பட்டு வெளியேறுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இந்த விவகாரத்தில் தலையிட்டுச் சமரசம் செய்ய முயன்றபோதிலும், நக்வி பிடிவாதமாக இருந்ததால் இந்திய அணி கோப்பையை வாங்காமல் புறக்கணித்ததும், இறுதியில் அவர் அவமானத்துடன் வெளியேறியதும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
