LATEST NEWS
இதுதான் கெத்து..! மேடையில் நின்ற பாகிஸ்தான் அமைச்சர்… பார்த்த அடுத்த நொடியே ஸ்மிருதி மந்தனா செய்த அதிரடி காரியம்… வைரலாகும் வீடியோ..!
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தது கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய வீராங்கனைகள் மறுத்ததால் இந்த அசாதாரண சூழல் உருவானது. இந்திய அணி இறுதிவரை மேடைக்கு வராததால், மோஷின் நக்வி கோப்பையுடன் தனியாக மேடையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.
இந்தச் சர்ச்சைக்குரிய தருணத்தின்போது, இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா களத்தில் எல்லைக் கோட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், மேடையில் மோஷின் நக்வி இருப்பதை மந்தனா கவனித்துள்ளார். அவர் அங்கு நிற்பதைக் கண்ட அடுத்த கணமே, ஸ்மிருதி மந்தனா எவ்வித தயக்கமும் இன்றி அங்கிருந்து திரும்பி, வீரர்கள் ஓய்வறை நோக்கி விறுவிறுப்பாக நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஆண்கள் ஆசியக் கோப்பையின் போது இதே மோஷின் நக்வியால் வெடித்த பழைய சர்ச்சையை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. அப்போதும் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய ஆண்கள் அணி மறுத்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்மிருதி மந்தனா நக்வியைப் பார்த்ததும் மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ, பிசிசிஐ-யின் கொள்கை முடிவுக்கு இந்திய வீராங்கனைகள் எவ்வளவு உறுதியாகக் கட்டுப்படுகிறார்கள் என்பதைக் காட்டுவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
