LATEST NEWS
“ரீல்ஸை நம்பாதீங்க brother…!” மிளிரும் வெளிச்சத்திற்கு பின்னால் இவ்வளவு பெரிய சோகமா..? துபாயின் இன்னொரு பக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த… இந்திய தொழிலாளியின் வைரல் வீடியோ.!!
உயர்ந்த வானளாவிய கட்டிடங்கள், ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் சோஷியல் மீடியா ரீல்ஸ்களில் மிளிரும் கவர்ச்சியான தோற்றத்திற்கு அப்பால், துபாயில் கேமராக்களின் கண்ணில் படாத மற்றொரு முகமும் உள்ளது. துபாயில் வசிக்கும் லலித் ஜோஷி என்ற இந்திய குடிமகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, அங்கு நிலவும் கடுமையான வெப்பத்தையும், அங்கு பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கடினமான வாழ்க்கையையும் உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
ஆகஸ்ட் 16 அன்று லலித் ஜோஷி வெளியிட்ட அந்த வீடியோவில், அவர் வேலை முடிந்து இரவு 9 மணிக்கு தனது அறைக்குத் திரும்பும்போது, வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே நடந்தபோதிலும் உடல் முழுவதும் வேர்வையில் நனைந்திருப்பதைக் காட்டியுள்ளார். அதில் அவர், “துபாயில் வேலை செய்வது மிக எளிது என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அது மிகவும் கடினமானது. இரவு 9 மணிக்கே 2 நிமிட நடையில் என் நிலைமை இப்படி என்றால், பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலில், குறிப்பாக கட்டுமானத் துறையில் வேலை செய்பவர்களின் நிலைமை எப்படி இருக்கும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
https://www.instagram.com/reel/DcEtXVnKPAJ/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராம் துபாயின் அழகிய பக்கத்தை மட்டுமே காட்டுகிறது என்றும், ஆனால் அதன் நிஜமான நிலையை அறிய குடும்பத்திற்காக கொளுத்தும் வெயிலில் வேர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் வாழும் பிற தொழிலாளர்களும் அங்குள்ள தாங்க முடியாத வெப்பம் மற்றும் தங்களின் சிரமங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சமூக ஊடகங்களின் கவர்ச்சிகரமான படங்களுக்கு பின்னால் தீவிரமான போராட்டமும் வேர்வையும் அடங்கியுள்ளது என்பதை இந்த பதிவு நினைவூட்டுகிறது.
