LATEST NEWS
2-வது திருமணம் செய்தால்… 20% சம்பளம் காலி…! விவாகரத்தின்றி மறுமணம் செய்யும் கணவர்களுக்கு அசாம் அரசின் செக்மேட்..!!
அசாமில் முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% பிடித்தம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். சட்டப்பூர்வ விவாகரத்து இன்றி மறுமணம் புரிவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்படும் முதல் மனைவிகளுக்குப் பொருளாதார பாதுகாப்பையும் நீதியையும் உறுதிசெய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மனைவி அரசிடம் புகார் அளித்தால், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். விசாரணை முடிவில் புகார் உண்மையென உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கணவரின் மாதச் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் உடனடியாகப் பிடித்தம் செய்யப்பட்டு, அது நேரடியாக முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
