“நைட்டியில வரச் சொன்னது நீங்கதான்.. கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்திறீங்களா..?” டிஆர்பி ரேட்டிங்கிற்காக எங்களை வச்சு செய்றாங்களா..? விஜய் டிவியை கிழித்து தொங்க விட்ட பிரிய வர்ஷினி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“நைட்டியில வரச் சொன்னது நீங்கதான்.. கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்திறீங்களா..?” டிஆர்பி ரேட்டிங்கிற்காக எங்களை வச்சு செய்றாங்களா..? விஜய் டிவியை கிழித்து தொங்க விட்ட பிரிய வர்ஷினி..!!

Published

on

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சிக்கான காமன் மேன் தேர்வுச் சுற்றில் பங்கேற்று நைட்டி அணிந்து வந்த காரணத்திற்காக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் பிரிய வர்ஷினி, விஜய் டிவி மற்றும் நடுவர் ஆரி மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நிகழ்ச்சியின் குழுவினரின் ஒப்புதலோடுதான் தான் நைட்டி அணிந்து ஆடிஷனுக்குச் சென்றதாகவும், ஆனால் டிஆர்பி ரேட்டிங்கிற்காகத் தன்னைத் திட்டமிட்டுத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தொலைக்காட்சியில் தன்னைத் தவறான கோணத்தில் சித்தரித்துவிட்டதாகவும், நிகழ்ச்சியில் தனக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்காக ஆரியும் மாயாவும் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மறுபுறம், நடுவர் ஆரி மற்றும் சக பங்கேற்பாளர்கள் தொடர்பான விவகாரங்களை முழுமையாக ஒளிபரப்பாமல் தங்களுக்குத் தேவையான காட்சிகளை மட்டும் எடிட் செய்து வெளியிட்டுள்ளதாகப் பிரிய வர்ஷினி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். சாதாரண மக்களுக்கான வாய்ப்பு என்று கூறிவிட்டுப் பின்னர் இதுபோன்ற அவமதிப்புகளைச் செய்வது ஏற்புடையதல்ல என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in