CINEMA
விறுவிறுப்பாகும் விஜய் டிவி சீரியல்கள்… “அய்யனார் துணை” முதல் இடத்தை பிடித்தது..! சின்னத்திரையில் யுத்தம் முதலிடத்திற்காக மோதும் முன்னணி சீரியல்கள் டிஆர்பி பட்டியலில் ட்விஸ்ட்…!
விஜய் டிவியின் சின்னத்திரை தொடர்களுக்கிடையே நிலவும் டிஆர்பி (TRP) ரேட்டிங் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்திய வாரத்தின் முடிவுகளின்படி, ‘அய்யனார் துணை’ சீரியல் 6.85 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மதுமிதா மற்றும் அரவிந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் தொடர், வெளியான குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, நீண்ட காலமாகப் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருந்து வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் 6.46 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், குடும்ப ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் 6.19 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. தந்தை மற்றும் மகன்களுக்கு இடையேயான பாசப் போராட்டத்தைச் சித்தரிக்கும் இத்தொடர், தொடர்ந்து டாப் 5 இடங்களுக்குள் நீடித்து வருகிறது.
பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில், 5.50 புள்ளிகளுடன் ‘சின்ன மருமகள்’ சீரியல் நான்காவது இடத்தையும், 4.75 புள்ளிகளுடன் ‘அழகே அழகு’ சீரியல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. விஜய் டிவியின் இந்த டாப் 5 சீரியல்கள் ஒவ்வொன்றும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவதால், வரும் வாரங்களில் இந்த ரேட்டிங் பட்டியலில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
