“டேட்டிங் வரலாமா..?” ஓபனாகக் கேட்ட வைல்ட் கார்ட் போட்டியாளர்.. வீணா காதலுக்கு விழுந்த பெரிய ஆப்பு.. புது என்ட்ரியால் தலைகீழாக மாறிய ஆட்டம்… பரபரக்கும் எபிசோட்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“டேட்டிங் வரலாமா..?” ஓபனாகக் கேட்ட வைல்ட் கார்ட் போட்டியாளர்.. வீணா காதலுக்கு விழுந்த பெரிய ஆப்பு.. புது என்ட்ரியால் தலைகீழாக மாறிய ஆட்டம்… பரபரக்கும் எபிசோட்..!!

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஸ்ருதிகா அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சி, தற்போது 2-வது வாரத்தைத் தாண்டி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 6 ஆண்கள், 6 பெண்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், யாருடனும் காதல் அமையாத காரணத்தால் அசீம், ஈடம் மற்றும் ராஜா ஆகிய 3 ஆண் போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களுக்குப் பதிலாகப் பெண்களைக் கவர புதிதாக 3 வைல்ட் கார்டு ஆண் போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

Wild Card Entry 🔥#SecondLove now streaming on #JioHotstar #SecondLoveOnJioHotstar #SecondLoveOnJHS #SecondLoveOnVijayTelevision #SecondLoveNowStreaming #NonFictionShow #RealityShow #SecondChance @Banijayasia #DeepakDhar #vibhasSingh #MrinaliniJain #ShyamRathipic.twitter.com/gEZa3ugIHU— JioHotstar Tamil (@JioHotstartam) July 27, 2026

புது போட்டியாளரின் வருகையால், ஏற்கனவே தினேஷுடன் தீவிர காதலில் இருக்கும் வீணாவை அவர் டேட்டிங்கிற்கு அழைத்து வம்பிழுக்க, வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் தேஜஸ் – நேஹா ஜோடியின் காதல் முறிய, பிரியங்கா, சிந்துரி, மோனிஷா ஆகியோர் இன்னும் சிங்கிளாகவே தொடர்கின்றனர். வாரத்திற்கு ஒரு காதல், அடுத்த வாரமே பிரேக்-அப், புது ஆட்கள் என்ட்ரி என ‘செகண்ட் லவ்’ வீட்டில் நடக்கும் கூத்துகளைப் பார்த்து நெட்டிசன்கள் “இதெல்லாம் ஒரு ஷோவா?” என இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in