CINEMA
“உனக்கு எவ்வளவு தைரியம்…?!” தளபதின்னு சொன்னா விசில் வருமா?.. சனம் ஷெட்டியை கிழித்துத் தொங்கவிட்ட காஜல்..!!
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைக்கேடு விவகாரத்தில் சிபிஐ சார்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். இதனிடையே, தமிழகத்தில் பாலன் இல்லத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நடிகை சனம் ஷெட்டி, தான் “தளபதி படம் பார்த்துவிட்டு வந்தேன்” என்று பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவர்கள் பசியும் பட்டினியுமாய் தங்கள் கோரிக்கைகளுக்காகக் களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கும் போது, நான் விஜய் படம் பார்த்தேன் என்று மேடையில் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? என்று சனம் ஷெட்டியைக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை காஜல் பசுபதி. ‘தளபதி’ என்ற பெயரைச் சொன்னால் கூட்டத்தில் கைதட்டலும் விசில்களும் பறக்கும் என்று கணக்கு போட்டாயா? காலம் மாறிப்போச்சு, இதெல்லாம் இப்போ வேலைக்காகாது என்று காட்டமாக விமர்சித்துள்ள அவர், தீவிரமான ஒரு போராட்ட மேடையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இதுபோன்ற தேவையற்ற பேச்சுகளைப் பேசியதற்குத் தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
