CINEMA
“எங்களுக்காக வாழ்ந்தது போதும்மா..” பெற்ற தாய்க்கு மாப்பிள்ளை தேடும் பிள்ளைகள்.. கலங்கி நின்ற தாய்மார்கள்… நீயா நானாவில் இந்த வார ஹாட் டாப்பிக்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட தலைப்புடன் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொடக்கம் முதலே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த வாரம் “திருமணம் செய்து கொள்ளச் சொல்லும் பிள்ளைகள் மற்றும் மறுமணத்திற்குத் தயங்கும் சிங்கிள் பேரண்ட் ” என்ற சுவாரஸ்யமான தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது.
இன்றைய காலத்தில் கணவர் இல்லாமல் தனியாகப் பிள்ளைகளை வளர்க்கும் அம்மாக்கள் அதிகளவில் இருக்கின்றனர். இவ்வாறு தனியாக வாழும் தாய்மார்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல், முழுக்க முழுக்கத் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் மட்டுமே நினைத்துத் தங்களின் ஆயுளைக் கழித்து விடுகின்றனர். ஆனால், அந்தப் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிந்த பிறகு, தாய்மார்கள் மீண்டும் தனிமையிலேயே நிற்கும் நிலைமை உருவாகிறது.
https://cinefeeds.in/this-weeks-hot-topic-on-neeya-naana/
https://cinefeeds.in/this-weeks-hot-topic-on-neeya-naana/
https://cinefeeds.in/this-weeks-hot-topic-on-neeya-naana/
இதனைக் கருத்தில் கொண்டு, சிங்கிள் பேரண்ட்டாக இருக்கும் தங்களது அம்மாக்களை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு பிள்ளைகள் வலியுறுத்தும் கருத்துகள் இந்த நிகழ்ச்சியின் அரங்கில் உரக்க ஒலித்துள்ளன. இருப்பினும், சமூகத்தை நினைத்தும் மற்றவர்களின் பேச்சைக் கருத்தில் கொண்டும் அம்மாக்கள் மறுமணம் செய்து கொள்வதற்கு விருப்பம் இல்லாமல் பின்வாங்கும் நிலையிலேயே உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி இந்த விவாதம் அமைந்துள்ளது.
