LATEST NEWS
“நீயும் என் பொண்ணு மாதிரி தான்” மகனை இழந்த துயரத்திலும் மருமகளுக்கு மறுமணம் முடித்த மாமனார்-மாமியார்.. இந்த காலத்துல இப்படிப்பட்டவங்களா..? குவியும் பாராட்டு..!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ஒரு குடும்பத்தின் இளம் மகன் புற்றுநோயால் உயிரிழந்தபோது, அவனது பெற்றோர் மீளாத் துயரத்தில் மூழ்கினர். அதே நேரத்தில், தங்களின் இளம் மருமகளின் சோகத்தையும், அவரது எதிர்காலம் பாழாவதையும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, தங்கள் மருமகளைத் சொந்த மகளாகவே கருதிய மாமனாரும் மாமியாரும், அவருக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடிவு செய்தனர். அவருக்கேற்ற தகுதியான ஒரு மணமகனைத் தேடிப் பிடித்து, இருவருக்கும் திருமண ஏற்பாடுகளையும் செய்தனர்.
திருமண விழாவின் போது, மணமகளின் பெற்றோர் செய்ய வேண்டிய ‘கன்னியாதானம்’ சடங்கை, இந்த மாமனாரும் மாமியாரும் பெற்றோராக நின்று முன்னின்று நடத்தினர். மணமகன் வீட்டாரும் அனைத்து இந்து மதச் சடங்குகள் மற்றும் பாரம்பரியப் வழக்கங்களின்படி இந்தத் திருமணத்தை முழு மரியாதையுடன் நடத்தினர்.
கைம்பெண் (விதவை) மறுமணம் குறித்து சமூகத்திற்கு ஒரு தெளிவான மற்றும் நெகிழ்ச்சியான செய்தியை வழங்கும் நோக்கில், தங்கள் மருமகளின் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக அவர்கள் இப்பெறுப்புமிக்க புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
