“எங்களுக்கு இல்லைனா என்ன, அவங்க வாழட்டும்! 455 பிஞ்சுகளின் இதயத்துடிப்பை மீட்ட தம்பதி!..பலரையும் உருக வைத்த ஒரு உன்னத சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்களுக்கு இல்லைனா என்ன, அவங்க வாழட்டும்! 455 பிஞ்சுகளின் இதயத்துடிப்பை மீட்ட தம்பதி!..பலரையும் உருக வைத்த ஒரு உன்னத சம்பவம்..!!

Published

on

திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகக் கருதப்படுகிறது. ஆனால், சீனாவைச் சேர்ந்த ‘டு – லு’ என்ற தம்பதிக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் பெரும் மனவேதனையில் இருந்தனர். இருப்பினும், தங்களின் அந்த குறையை நினைத்து முடங்கிவிடாமல், சமுதாயத்திற்குப் பயனுள்ள ஒரு மாபெரும் முடிவை எடுத்தனர். தங்களின் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த சுமார் 7 கோடி ரூபாய் சேமிப்புப் பணத்தை, ஒரு உன்னதமான காரியத்திற்காக அர்ப்பணிக்க முன்வந்தனர். பிறக்கப்போகும் தங்களின் வாரிசுக்காகச் சேர்க்கப்பட்ட அந்தப் பணம், வறுமையில் வாடும் பல ஏழைக் குழந்தைகளின் உயிரைக் காக்கும் அருமருந்தாக மாறியது.

பிறவியிலேயே கடுமையான இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுக்கு வழியின்றி தவித்த 455 பிஞ்சுக் குழந்தைகளுக்கு இவர்களின் அந்த சேமிப்புப் பணம் மூலம் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. எந்த குழந்தைக்காக இவர்கள் பல ஆண்டுகள் ஏங்கினார்களோ, அந்த ஏக்கத்தை 455 உயிர்களைக் காப்பாற்றியதன் மூலம் அவர்கள் தீர்த்துக் கொண்டனர். தற்போது இந்த தம்பதியினர் உயிருடன் இல்லை என்றாலும், இவர்களின் இந்த மகத்தான உதவியை அவர்கள் மூலம் பயனடைந்த குழந்தைகளை நிர்வகிக்கும் அறக்கட்டளை சமீபத்தில் உலகிற்குத் தெரியப்படுத்தியுள்ளது. தங்களுக்குச் சொந்தக் குழந்தை இல்லை என்றாலும், இன்று 455 உயிர்களுக்கு மறுவாழ்வு அளித்த உண்மையான பெற்றோர்களாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in