LATEST NEWS
“செந்தில்பாலாஜிக்கு முதல்வர் விஜய் வைத்த மெகா செக்.. சிங்கப்பூரில் இருந்து பறக்கும் ஆதாரங்கள்.. நீதிமன்ற முன்ஜாமினுக்குப் பின்னால் நடந்த நள்ளிரவு பரபரப்பு”..!!
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செக் வைக்க முதல்வர் விஜய் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே செந்தில்பாலாஜியை அதிரடியாகக் கைது செய்ய முதல்வர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த நடவடிக்கையை முன்கூட்டியே மோப்பம் பிடித்த செந்தில்பாலாஜி, கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று போலீசாரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பியோடியுள்ளார்.
முன்ஜாமின் பெற்றதால் தற்காலிகமாக அவர் தப்பியிருந்தாலும், இந்த வழக்கில் அவரை எப்படியும் சட்டத்தின் முன் நிறுத்த முதல்வர் விஜய் தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது. இதன் அடுத்தகட்டமாக, இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரிடமிருந்து அனைத்து முக்கிய ஆதாரங்களையும் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் குற்றவாளியிடமிருந்து பெறப்படும் ஆதாரங்களின் அடிப்படையில், செந்தில்பாலாஜியைச் சுற்றிவளைத்து சட்ட ரீதியாகக் கைது செய்ய முதல்வர் விஜய் தரப்பு வியூகம் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
