LATEST NEWS
‘I Love You’.. ஃபர்ஸ்ட் ஏசி கோச்சை ‘ஹனிமூன் ரூம்’ ஆக மாற்றி அலப்பறை செய்த தம்பதி.. வைரல் வீடியோவால் சிக்கிய டிசி.. இந்திய ரயில்வேயின் அதிரடி ஆக்சன்..!!
இந்திய ரயில்வேயின் முதல் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, தேன்நிலவு அறை போல ரோஜா பூக்கள், பலூன்கள் மற்றும் “I Love You” என்ற வாசகங்களுடன் சொகுசாக அலங்கரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மகாராஷ்டிராவின் ஜால்னாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதியருக்காக ‘ரஹத் ரூம் டெக்கரேஷன்’ என்ற நிறுவனம் நாந்தேட் கிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது. தம்பதியினர் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே நிறுவன ஊழியர்கள் பெட்டிக்குள் நுழைந்து இந்த அலங்காரப் பணிகளை முடித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் இதற்கு “சுஹாக்ராத் எக்ஸ்பிரஸ்”, “ஹானிமூன் ஆன் வீல்ஸ்” எனப் பெயரிட்டு மீம்களைப் பறக்கவிட்டு வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த ஆடம்பர அலங்காரம் இந்திய ரயில்வேயின் எவ்வித அனுமதியும் இன்றி, விதிமுறைகளை மீறிச் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறி, அலங்கார நிறுவன ஊழியர்களை உள்ளே அனுமதித்த குற்றத்திற்காக அப்போது பணியில் இருந்த தலைமை டிக்கெட் ஆய்வாளர் கிரிஷ் குமார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பலூன்கள் மற்றும் காகித அலங்காரப் பொருட்கள் ரயிலின் தீ பாதுகாப்பு விதிகளை மீறுவதாகவும், தூய்மையைக் கெடுப்பதாகவும் பயணிகள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளதால், இந்த முறைகேட்டிற்குப் பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து துறை ரீதியான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
