LATEST NEWS
“‘அடப்பாவமே..! 4 மாம்பழத்தின் விலை இத்தனை லட்சங்களா..?!’” விவசாயி செய்த அசத்தல் சாதனை.. இந்தியாவையே உலுக்கிய ‘மியாசாகி’ சம்பவம்..!!
உலகின் மிக விலைமதிப்ப உயர்ந்த மாம்பழ ரகமான ‘மியாசாகி’ மாம்பழங்களை உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த விவசாயி சந்தீப் சவுத்ரி பயிரிட்டு விற்பனை செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் சவுத்ரி பயிரிட்ட 1 கிலோ எடையுள்ள 4 மியாசாகி மாம்பழங்கள் ரூ.2.11 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளன. குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரவீன் குப்தா என்பவர், தனது தாயாருக்காக இந்த அரிய வகை மாம்பழங்களை இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
दुनियां का सबसे मंहगा आम!
किसान संदीप चौधरी के 4 मियाजाकी आम ₹2.11 लाख में बिके है. इन आमों का वजन एक किलो है. गुजरात के कारोबारी प्रवीण गुप्ता ने यह आम अपनी मां के लिए खरीदे है.
संदीप चौधरी से एक किलो मियाजाकी आम का सौदा पहले साढ़े ₹3 लाख रूपये में तय हुआ था,
📍सहारनपुर, pic.twitter.com/u80ZcfJhGX— Farman Saifi (@FarmanSaifi1077) July 29, 2026
ஆரம்பத்தில் இந்த ஒரு கிலோ மியாசாகி மாம்பழத்திற்கான பேரம் ரூ.3.5 லட்சம் வரை பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. சஹாரன்பூரில் விளைவிக்கப்பட்ட இந்த உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய ரக மாம்பழங்கள், அதன் தனித்துவமான சுவை, வண்ணம் மற்றும் மருத்துவக் குணங்களுக்காக அறியப்படுபவை. இவ்வளவு அதிக விலைக்கு மாம்பழங்கள் விற்பனையான சம்பவம், இந்திய விவசாய உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
