BREAKING: பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!!

Published

on

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில் பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலத்தை 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு இணையாக திருக்கோவில் பணியாளர்களின் பணிநலன், குடும்ப நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் விதிகள் 2020-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் மகப்பேறு விடுப்பு மட்டுமின்றி, ஓய்வு பெறும் திருக்கோவில் பணியாளர்கள் தங்களது ஈட்டிய விடுப்பை அதிகபட்சமாக 240 நாட்கள் வரை ஒப்படைத்து, அதற்குரிய பணப்பலனைப் பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த இரட்டை அறிவிப்புகள், நீண்ட நாட்களாக இப்பணியாளர்கள் கோரி வந்த முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு பெரும் பயனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in