“என்னடா இப்படி பண்றீங்க.. பணத்தை எடுக்கல.. மெஷினையே தூக்கிட்டு போயிட்டாங்க..!” சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்ட கொள்ளையர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“என்னடா இப்படி பண்றீங்க.. பணத்தை எடுக்கல.. மெஷினையே தூக்கிட்டு போயிட்டாங்க..!” சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்ட கொள்ளையர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Published

on

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள கைரா காவல் எல்லைக்குட்பட்ட துடிகாடியா சந்தைப் பகுதியில், சினிமா பாணியில் கருப்பு நிற மஹிந்திரா தார் வாகனத்தைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தையே வேரோடு பிடுங்கி இழுத்துச் சென்ற துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கார் மூலம் இந்த ஏடிஎம் மையத்திற்கு வந்து, முதலில் அதன் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை ஒரு தடிமனான கயிற்றால் தங்களது தார் காரின் பின்புறம் கட்டி, வாகனத்தை வேகமாக இயக்கி அதை மையத்திலிருந்து அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சாலையில் ஏடிஎம் இயந்திரத்தை இழுத்துச் சென்ற கொள்ளையர்கள், அதை ஒரு ஒதுக்குப்புறமான தனிமையான இடத்திற்குக் கொண்டு சென்று உடைத்து, உள்ளே இருந்த பணத்தை முழுமையாகக் கொள்ளையடித்து விட்டு, சேதமடைந்த இயந்திரத்தை அங்கேயே வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். இந்த வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் கொள்ளைச் சம்பவம் முழுவதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கைரா போலீஸார், பாழடைந்த ஏடிஎம் இயந்திரத்தைக் கைப்பற்றி, சிசிடிவி ஆதாரங்களை வைத்துக் கொள்ளையர்களைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in