LATEST NEWS
“நெருங்குனா அவ்வளவுதான்..!” குரங்கு செஞ்ச அதீத குறும்பால் நேர்ந்த விபரீதம்.. காப்பாற்றப் போனவங்களுக்கு காத்திருந்த மெகா ஷாக்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
சமீப நாட்களாகக் குரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அவை செய்யும் அதீத குறும்புத்தனங்கள் காரணமாகக் குரங்கு ஒன்று தற்போது பெரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ள விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்டிடங்களின் மொட்டை மாடி மற்றும் கூரைகளில் நீட்டிக்கொண்டிருக்கும் இரும்பு கம்பிகளுடன் விளையாடுவதைக் குரங்குகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், இன்று விளையாட்டின் போது ஏற்பட்ட ஒரு சிறிய தவறால், அந்தக் குரங்கு அங்கிருந்த கூர்மையான இரும்பு கம்பியிலேயே எதிர்பாராத விதமாக மிக மோசமாக மாட்டிக்கொண்டது.
கம்பியில் சிக்கிய அந்தக் குரங்கைப் பாதுகாப்பாக மீட்கப் பொதுமக்கள் முயன்றபோதிலும், அதை வெளியே எடுப்பது தற்போதைய சூழலில் பெரும் சவாலாக மாறியுள்ளது. தங்களது கூட்டாளியைக் காப்பாற்றச் செல்பவர்களைத் ஆபத்தான எதிரி என நினைத்துக் குரங்குப் பட்டாளங்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்து மக்களைத் தீவிரமாகத் தாக்கி வருகின்றன. இதனால், மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அப்பகுதி மக்கள் வனத்துறையினரின் அவசர உதவிக்காகக் காத்திருக்கின்றனர்.
