LATEST NEWS
“ஐயோ..! தொண்டையில் சிக்கிய முட்டை… பேச முடியாமல் துடித்த இளைஞர்.. அப்புறம் நடந்த அதிசயம்.. உணவகத்தில் நடந்த த்ரில்லிங் சம்பவம்.. நெஞ்சை படபடக்க வைக்கும் வீடியோ..!!”
நாம் சாப்பிடும் உணவைச் சற்று நிதானமாக உண்ண வேண்டும் என்பதற்குச் சான்றாகக் கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சாப்பிடச் சென்ற வாலிபர் ஒருவர், உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் சாப்பிட்ட முட்டை அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டது. தொண்டையில் அடைப்பு ஏற்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அந்த வாலிபரால் பேசக்கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்.
आप थोड़ा सोच के देखिए कि आप खाना खा रहे हो,खाते वक्त आपके गले में अंडा फंस जाए !
एक युवक केरल के एक रेस्टोरेंट में खाने के लिए गया,अचानक जब खा रहा था उनके गले में लग जाता है,फंसने के बाद युवक का दम घुट गया, बोल नहीं पा रहा था,
लेकिन उसका दोस्त और रेस्टोरेंट के कर्मचारियों ने… pic.twitter.com/WKsvWP9i4d— Subhajit Das (@SantaniSubhajit) July 29, 2026
உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்ட அவரது நண்பரும் உணவக ஊழியர்களும், அந்த வாலிபரை முன்னோக்கி நையக் குனியவைத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்தனர். மேலும், உணவகத்தின் உரிமையாளரும் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி செய்தார். அனைவரின் துரிதமான நடவடிக்கையால், தொண்டையில் சிக்கியிருந்த முட்டை வெளியே வந்து அந்த வாலிபர் ஆபத்தின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
