அடக்கடவுளே..! மனைவியைக் கொன்ற ஓட்டுநர் ஜாமினில் விடுதலை.. 7 மாதங்கள் காத்திருந்து கணவன் செய்த கொடூர பழிவாங்கல்.. கிளைமாக்ஸில் பகீர் திருப்பம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே..! மனைவியைக் கொன்ற ஓட்டுநர் ஜாமினில் விடுதலை.. 7 மாதங்கள் காத்திருந்து கணவன் செய்த கொடூர பழிவாங்கல்.. கிளைமாக்ஸில் பகீர் திருப்பம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் பாண்டிகுமாரின் மனைவி மகேஸ்வரி, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆவுடைபொய்கை பகுதியில் காருக்குள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குன்றக்குடி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மகேஸ்வரியிடம் ஆக்ட்டிங் ஓட்டுநராகப் பணிபுரிந்த சசிகுமார் என்பவர் நிலம் வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, அவரிடம் நிலுவையில் இருந்த பணத்தைக் கேட்கவே ஆத்திரமடைந்து, மகேஸ்வரியைச் சரமாரியாகத் தாக்கியும் காரின் கதவுகளால் நசுக்கியும் கொன்று, அவர் அணிந்திருந்த 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சசிகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த சசிகுமாரைப் பழிவாங்க எண்ணிய பாண்டிகுமார், சிவகங்கையைச் சேர்ந்த பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவருமான அரவிந்தை அணுகி ரூ.15 லட்சத்திற்குப் பேரம் பேசி, முன்பணமாக ரூ.8.50 லட்சம் கொடுத்துக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியுள்ளார். திட்டமிட்டபடி கடந்த 21-ஆம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டுத் திரும்பிய சசிகுமாரை, 8 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் பின் தொடர்ந்து சென்று தளக்காவூர் பெட்ரோல் பங்க் அருகே காரால் மோதி விபத்தை ஏற்படுத்தியது. கீழே விழுந்த சசிகுமாரை அரிவாளுடன் விரட்டிச் சென்று வெட்ட முயன்றபோது, அவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து ஓடி 100 என்ற அவசர எண்ணிற்குத் தொடர்பு கொண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

Advertisement

இதுகுறித்து நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீரணிப்பட்டி மற்றும் கல்லல் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய அதிரடி விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் குட்லக் தனசேகரன் மற்றும் அபிராகுல் ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில் மனைவியைக் கொன்றவனைப் பழிவாங்குவதற்காகக் கூலிப்படையை ஏவியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாண்டிகுமாரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சதித்திட்டத்தில் தொடர்புடைய கூலிப்படைத் தலைவன் அரவிந்த் உள்ளிட்ட தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மனைவிக் கொலையப் பழிவாங்க 7 மாதங்களுக்குப் பிறகு கணவனே கூலிப்படையை ஏவிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in