LATEST NEWS
“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பரான விருந்து..!” இனி சத்துணவில் சிக்கன் பிரியாணி… அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!
தமிழ்நாட்டிலுள்ள 37,595 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஐம்பத்தி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து தேவைகளைக் கருத்தில்கொண்டு, நடைமுறையிலுள்ள சத்துணவுத் திட்டத்தின் கீழ் வெஜிடபிள் பிரியாணி மற்றும் பல்வேறு கலவை சாதங்களுடன் சேர்த்து முட்டை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வாரம் ஒருமுறை ‘சிக்கன் பிரியாணி’ வழங்கும் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இதுகுறித்த ஆலோசனைகள் பெறப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்குப் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்டில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
