“விஐபி வர்றாங்க… ஓடுங்கடா வெளிய..!” கொட்டும் மழையில் சாமானிய மக்களை விரட்டியடித்த போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஐபி வர்றாங்க… ஓடுங்கடா வெளிய..!” கொட்டும் மழையில் சாமானிய மக்களை விரட்டியடித்த போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முக்கியப் பிரமுகரின் வாகன அணிவகுப்பிற்காகப் பாதையெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அப்பகுதியில் கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில், கொட்டும் மழையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த நிழற்குடையில் ஒதுங்கி நின்ற சாமானிய மக்களைக் காவல்துறையினர் கட்டாயப்படுத்தி விரட்டியடித்த நெஞ்சிலா சம்பவம் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக நிற்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டு விரட்டப்படும் இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

राजस्थान : जयपुर में VIP काफिला निकल रहा था। पूरे रास्ते में पुलिसकर्मी तैनात थे। बारिश से बचने के लिए यात्री शेड में खड़े लोगों को पुलिस ने बाहर भगा दिया। कितना शर्मनाक है ये… pic.twitter.com/qBlIGzbuup— Sachin Gupta (@Sachingupta) July 28, 2026

மழையில் நனைந்துகொண்டே மக்களை விரட்டியடித்த காவல்துறையினரின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஐபி கலாச்சாரத்திற்கு எல்லைமீறிய முக்கியத்துவம் கொடுத்து, மழையில் ஒதுங்க வந்த சாமானிய மக்களுக்குக் கூட அனுமதி மறுத்த இந்தச் சம்பவம், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகச் செயல்பட வேண்டிய துறையின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதோடு, அதிகார வர்க்கத்தின் இரக்கமற்ற அணுகுமுறையைக் காட்டும் அவமானகரமான நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in