“காங்கிரஸை கூட்டணில சேர்க்கலாமா..?” விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி.. ரகசியத்தை போட்டு உடைத்த சீமான்.. வெடித்த புதிய அரசியல் புயல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காங்கிரஸை கூட்டணில சேர்க்கலாமா..?” விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி.. ரகசியத்தை போட்டு உடைத்த சீமான்.. வெடித்த புதிய அரசியல் புயல்..!!

Published

on

தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தன்னிடம் கூட்டணி மற்றும் அரசியல் ஆலோசனைகள் குறித்துப் பேசிய விசித்திரமான ரகசியங்களை வெளிப்படையாக உடைத்துள்ளார். சீமானும் விஜய்யும் ஒரே வாகனத்தில் பயணித்த போது, வாகனத்தை விஜய்யே இயக்கியுள்ளார். அப்போது, தங்களது கூட்டணியில் காங்கிரஸைக் கூட சேர்த்துக் கொள்ளலாமா என்று விஜய் சீமானிடம் கேட்டுள்ளார். அதற்கு உடனடியாகப் பதிலளித்த சீமான், “யார் உங்களுக்கு இந்த யோசனையைக் கூறியது? காங்கிரஸைக் கையில் வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக நம்மால் என்ன பேச முடியும்?” என்று கூறி அந்த யோசனையைத் திட்டவட்டமாக மறுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தங்களது உரையாடலின் போது, நாட்டில் மலிந்து கிடக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று விஜய் தன்னிடம் கேட்டதாகச் சீமான் குறிப்பிட்டுள்ளார். விஜய் என்ற தனிமனிதருக்கு ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற தூய்மையான நோக்கம் இருக்கிறது, ஆனால் அவரது கட்சியில் உள்ள பிறருக்கு அந்த நோக்கம் இல்லை என்று சீமான் விமர்சித்துள்ளார். விஜய்யின் நோக்கம் தவெக கட்சியினராலேயே பாழாகிவிடும் என்பதால் தான், அரசியல் ரீதியாகத் தவெகவினரை ஒழிக்க முடிவு செய்துள்ளோம் என்று சீமான் அதிரடியாகப் பேசியுள்ளது தாராபுரம் தேர்தல் களத்திலும் ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in