LATEST NEWS
“எங்க மாட்டை எப்படிப் பிடிக்கலாம்..?” நடுரோட்டில் கூர்மையான ஆயுதங்களுடன் அதிகாரிகள் மீது பாய்ந்த.. கும்பல் செய்த பகீர் காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சியின் சந்தைத் துறை அதிகாரிகள், அம்ரோலி பகுதியில் உள்ள கோசாட் கார்டன் அருகே சாலையில் சுற்றித் திரிந்த கால்நடைகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குத் திரண்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் சிலர், மாநகராட்சி ஊழியர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையான மோதலில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளைத் தாக்கி, அவர்கள் வண்டியில் ஏற்றிப் பிடித்து வைத்திருந்த இரண்டு பசுக்கள் மற்றும் ஒரு கன்றை, கயிறுகளைத் துண்டித்து பலவந்தமாக விடுவித்து ஓட்டிச் சென்றுள்ளனர்.
இந்த கடுமையான மோதலின் போது, அங்கிருந்த சிலர் கூர்மையான ஆயுதங்களால் சூரத் மாநகராட்சி ஊழியர்களைத் தாக்க முயன்றதாகவும், அவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களைத் தாக்கி, அரசுப் பணியை முடக்கிய இந்தச் அத்துமீறல் சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அம்ரோலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
