“அப்பா CM-ஆ இருக்காரு…” குடும்ப மரியாதையை கெடுக்க மாட்டேன்.. மனம் திறந்த விஜய் மகன் ஜேசன் சஞ்சய்… வைரலாகும் பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்பா CM-ஆ இருக்காரு…” குடும்ப மரியாதையை கெடுக்க மாட்டேன்.. மனம் திறந்த விஜய் மகன் ஜேசன் சஞ்சய்… வைரலாகும் பேட்டி..!!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும், வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது குடும்ப மரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்துப் பகிர்ந்துள்ள அவர், “என் தந்தை முதலமைச்சராக உள்ளார். எனவே, என் குடும்பத்தின் கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது; அதை எந்த விதத்திலும் கெடுக்கும் வகையில் நான் நடந்து கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனது சொந்த வாழ்க்கையிலும் இதைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவே விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், தனது தந்தையின் அரசியல் மற்றும் சினிமா அடையாளங்களைத் தாண்டி, திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடிக்க அவர் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சினிமாவில் வாரிசு என்ற முத்திரை இல்லாமல், தன்னை ஒரு தனிப்பட்ட இயக்குநராகவே அனைவரும் பார்க்க வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என்றும் ஜேசன் சஞ்சய் அந்தப் பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in