அடுத்த பரபரப்பு..! சிக்கிய செல்போன்களில் மேலும் பல ஆபாச விடியோக்கள்..? ஜெம் வீரமணி வழக்கில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்த பரபரப்பு..! சிக்கிய செல்போன்களில் மேலும் பல ஆபாச விடியோக்கள்..? ஜெம் வீரமணி வழக்கில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

Published

on

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகத் தொடரப்பட்ட ஜெம் வீரமணி பாலியல் வழக்கில், கைது செய்யப்பட்ட கணேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை பெரம்பூர், ராயப்பேட்டை, கோபாலபுரம் மற்றும் தி.நகர் உட்பட 5 முக்கிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது பல்வேறு செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட செல்போன்களில் ஏற்கனவே வெளியான வீடியோக்கள் தவிர, கூடுதலாக ஆபாச வீடியோக்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காகக் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கணேசனின் செல்போன்கள் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, டிஜிட்டல் ரீதியான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

குறிப்பாக, செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களை மீட்டெடுத்து டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆய்வின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை, இந்த வீடியோக்கள் வேறு யாருக்காவது பகிரப்பட்டதா, மற்றும் இவற்றை எடுத்துச் சேமித்து வைத்ததன் பின்னணி என்ன போன்ற பல முக்கியத் தகவல்களைத் திரட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in