“யாரும் AI-ஐ இப்படிப் பயன்படுத்தாதீங்க…” 500K ஃபாலோயர்கள் கொண்ட இன்ஸ்டா வாலிபர் கண்ணீருடன் விடுத்த எச்சரிக்கை.. பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாரும் AI-ஐ இப்படிப் பயன்படுத்தாதீங்க…” 500K ஃபாலோயர்கள் கொண்ட இன்ஸ்டா வாலிபர் கண்ணீருடன் விடுத்த எச்சரிக்கை.. பகீர் பின்னணி..!!

Published

on

வறுமையில் வாடியதால் எந்தவொரு பெண்ணும் மதிக்காத ஒரு வாலிபர், சமூக ஊடகங்களில் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தித் தீவிரமாக உழைத்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே பெருமளவில் பணம் சம்பாதித்து சாதனை படைத்துள்ளார். ஆரம்பத்தில் மக்கள் ரசிக்கும்படியான நகைச்சுவையான மற்றும் எளிய வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கிய இவருக்கு, நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது. குறுகிய காலத்திலேயே 5 லட்சம் ஃபாலோயர்களைப் பெற்ற அவர், அதன் மூலம் மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை நல்ல வருமானமும் ஈட்டத் தொடங்கினார்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியூஸ்களை அள்ள வேண்டும் என்ற நோக்கில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பணம் நிரம்பிய லாரி ஒன்றின் வீடியோவை உருவாக்கிப் பதிவிட்டுள்ளார். ஆனால், பேராசை பெரு நஷ்டம் என்பது போல, அந்த வீடியோவைப் பார்த்த காவல்துறையினர் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை என நினைத்து அந்த வாலிபரை அதிரடியாகக் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பது கண்டறியப்பட்ட நிலையில், “யாரும் ஏஐ தொழில்நுட்பத்தை இதுபோன்று தவறாகப் பயன்படுத்த வேண்டாம், இல்லையெனில் என்னைப்போலப் பெருமளவில் வருந்த நேரிடும்” என்று அந்த வாலிபர் கண்ணீருடன் எச்சரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in