“நோட் எழுதினாங்க.. ஆனா..” ஜெம் வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலினை ஏமாற்றிய அதிகாரிகள்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நோட் எழுதினாங்க.. ஆனா..” ஜெம் வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலினை ஏமாற்றிய அதிகாரிகள்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!!

Published

on

முன்னாள் திமுக ஆட்சிக் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெம் வீரமணி பாலியல் வன்பொடுமை வழக்கில், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் உயர் அதிகாரிகள் சிலர் ஒன்றிணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு, முந்தைய அரசையே ஏமாற்றியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் வந்த உடனேயே, அப்போதைய உயர் அதிகாரிகள் முறைப்படி முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு விரிவான அறிக்கை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், வீரமணி மீது சட்டப்படி கடுமையான வழக்குத் தொடர மு.க.ஸ்டாலின் உடனடியாக அனுமதி அளித்த பின்னரே காவல்துறை தரப்பில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட விதிகளின்படி, ஒரு முக்கிய வழக்கை முடித்து வைக்க காவல்துறை முடிவெடுத்தால், அதுகுறித்த இறுதித் தகவலை முதலமைச்சரிடம் தெரிவிப்பது கட்டாயமான ஒரு நடைமுறையாகும். ஆனால், இந்த வழக்கை அவசர அவசரமாக முடித்து வைக்க முயன்ற உயர் அதிகாரிகள், அந்த விவகாரத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்காமல் திட்டமிட்டு முழுமையாக மறைத்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த திமுக அரசுக்குத் தெரியாமல், முதலமைச்சரையே ஏமாற்றி இந்த வழக்கை முடித்து வைக்கத் துணிந்த அதிகாரிகள் யார் யார் என்பது குறித்து, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு முழுமையான விசாரணையைத் தீவிரப்படுத்த உத்திரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in